undefined

பனிப்பொழிவு தாக்கம்...  ஸ்ரீநகரில் 50 விமானங்கள் ரத்து… சுற்றுலாப் பயணிகள் தவிப்பு!

 

ஜம்மு–காஷ்மீரில் குளிர்காலம் உச்சத்தை நெருங்கியுள்ள நிலையில், தலைநகரான ஸ்ரீநகரில் பனிப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. தொடர் பனிவீழ்ச்சியால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து சேவைகள் பெரிதும் முடங்கியுள்ளன.

இந்த நிலையில், இன்று ஜனவரி 27ஆம் தேதி ஸ்ரீநகரில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 25 விமானங்களின் புறப்பாடும், 25 விமானங்களின் வருகையும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குடியரசு நாள் விடுமுறையை கொண்டாட ஜம்மு–காஷ்மீர் சென்ற நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையம் மற்றும் ஹோட்டல்களில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வானிலை சீரான பின்னரே சேவைகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!