undefined

 விஜய் சொகுசு விமானத்திற்கு வாடகை  ரூ.50 லட்சம்  !

 

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்,  சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் நடந்த அவரது பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் விசாரணைக்காக விஜய்யை டெல்லி வருமாறு அதிகாரிகள் அழைத்தனர்.

இதையடுத்து, நேற்று காலை தனியார் சொகுசு விமானத்தில் டெல்லி சென்ற விஜய், விசாரணை முடிந்து இன்று மதியம் சென்னை திரும்பினார். அவர் பயணம் செய்தது ‘பிளை எஸ்பிஎஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான எம்ப்ரேர் லெகசி 600 ரக விமானம். இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 13 பேர் வரை பயணம் செய்யலாம்.

இந்த விமானம் 5,500 கி.மீ. தூரம் வரை தரையிறங்காமல் செல்லும் திறன் கொண்டது. உள்ளே ஷோபா வடிவில் இருக்கைகள், உயர்தர வசதிகள் உள்ளன. ஒரு மணி நேர வாடகை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என கூறப்படுகிறது. இந்த டெல்லி பயணத்துக்காக விமான வாடகைக்கு மட்டும் சுமார் ரூ.50 லட்சம் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!