கார் மீது மோதி பேருந்து கவிழ்ந்து 50 பேர் படுகாயம் ... பெரும் பரபரப்பு!
ஆண்டிபட்டி அருகே பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. டி.பொம்மிநாயக்கன் பட்டியிலிருந்து போடி நோக்கி சென்ற பேருந்து, முன்னால் சென்ற கார் மீது மோதியது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து புளியமரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் காரில் இருந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து ஆண்டிபட்டி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்து நடந்த சூழ்நிலை குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!