undefined

மூச்சுத் திணறும் டெல்லி…  அரசு–தனியார் அலுவலகங்களுக்கு ‘50% Work From Home’ உத்தரவு”

 
 

தீபாவளிக்குப் பிறகு அதிகரித்து வரும் காற்று மாசு டெல்லி–என்சிஆர் பகுதிகளை மோசமாகப் பாதித்துள்ளது. சுவாசக்கோளாறு, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அதிகரித்த நிலையில், நிலைமை கட்டுக்குள் வர பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. கட்டுமானப் பணிகள், இடிபாடு மாற்றுதல், பெயிண்ட் வேலை போன்றவை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சூழல் தரம் மேலும் சீரழிந்ததால் அரசு கடுமையான புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐடி துறைக்கே மட்டும் அல்லாது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் உத்தரவு. மேலும், 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு தொடரலாம் என பள்ளிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்துவதைத் தடுக்கவும், மின்சாரம் தடைப்படாமல் வழங்கும் பொருட்டு மின்துறை அதிகாரிகளுக்கு கட்டாய அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.

டெல்லி சுற்றுச்சூழலை கண்காணிக்கும் CAQM, கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்ஷன் பிளான் (GRAP) மூலம் 24 மணி நேரமும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமனம், அலுவலக வேலை நேர மாற்றம் உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. “அனைத்து மாசுபாடு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் முழு தீவிரத்துடனும் நடைபெற்று வருகிறது,” என டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!