சிதம்பரம் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு 50 சவரனில் தங்கக் காசு மாலை காணிக்கை!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில், சிவகாமி அம்மனுக்குச் சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் விலை உயர்ந்த தங்கக் காணிக்கையைச் செலுத்தியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற தீவிர சிவபக்தர், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் மீது கொண்ட பக்தியின் காரணமாக இந்த நேர்த்திக்கடனைச் செலுத்தியுள்ளார். இந்தக் காசு மாலையின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 45 லட்சம் ஆகும். சுமார் 50 பவுன் எடையுள்ள தங்கக் காசுகளைக் கொண்டு இந்த மாலை நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 8ம் தேதி காலை பூஜையின் போது, இந்தக் காசு மாலை சித்சபையில் வீற்றுள்ள சிவகாமி அம்மனுக்குச் சாற்றப்பட்டுச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர் சுப்பிரமணியன், இந்தத் தங்கக் காசு மாலையைத் தனது கட்டளை தீட்சிதரான ராமலிங்க தீட்சிதர் மூலம் கோவில் பொது தீட்சிதர்களிடம் முறைப்படி ஒப்படைத்தார். இதனைப் பெற்றுக்கொண்ட தீட்சிதர்கள், அம்மனுக்கு அணிவித்துத் தீபாராதனை காட்டினர்.
விசேஷமான இந்தத் தங்கக் காசு மாலையுடன் காட்சியளித்த சிவகாமி அம்மனைத் தரிசிக்கக் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இதுபோன்று பக்தர்கள் அவ்வப்போது விலை உயர்ந்த தங்கம் மற்றும் வைர நகைகளைக் காணிக்கையாக வழங்குவது வழக்கமான ஒன்றாகும்.
சமீபத்தில் ஒரு பக்தர் ரூ. 2.35 கோடி மதிப்பிலான தங்கத் திருவாச்சியை வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது இந்தத் தங்கக் காசு மாலை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!