சூப்பர் ஸ்டாருக்கு 50 ஆண்டு சினிமா.... 40 அடி மாஸ்டர் ஓவிய கண்காட்சி!
சன் டிவி–பெர்கர் பெயின்ட்ஸ் இணைந்து ரஜினிகாந்தின் 50 ஆண்டு சினிமா பயணத்தை சிறப்பிக்கும் வகையில் வித்தியாசமான விழா நடந்தது. செம்பரம்பாக்கம் வேல்ஸ் கன்வென்ஷன் சென்டரில் 40 அடி உயர மாஸ்டர் சுவரோவியம் வெளியிடப்பட்டது. ஸ்டைல் மனுஷனின் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்களை, 100 ஓவியர்கள் தீட்டிய 50 ஓவியங்களும் கண்காட்சியில் பொலிந்தன.
நிகழ்ச்சியில் சன் டிவி தொடர்களான மருமகள், எதிர் நீச்சல் நட்சத்திரங்கள் கலக்கினர். ஓவியர்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்து கொண்ட போட்டிகள், வினாடி வினா, ரஜினி வசன் பேச்சுப் போட்டி என பல சுவாரஸ்யங்கள் நடந்தன. ஓவியர்களுக்கு பெர்கர் பெயின்ட்ஸ் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த சுவரோவியங்கள் தமிழக முழுவதும் “சுவரோவிய யாத்திரை” மூலம் பொதுமக்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. டீலர்கள், சில்லரை விற்பனை மையங்களிலும் காட்சிப்படுத்த உள்ளனர். ரஜினிகாந்தின் அரை நூற்றாண்டு சாதனைகளும், பெர்கர் பெயின்ட்ஸின் 100 ஆண்டு பாரம்பரியமும் இணைந்த இந்த கொண்டாட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!