ஒரு மணி நேரத்தில் 5000 இட்லி… குருவாயூரில் அசத்தல் நவீன இயந்திரம்!
குருவாயூர் கோயிலில் ஒரு மணிநேரத்தில் 5000 இட்லி தயாரிக்கும் நவீன இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அறநிலைத்துறை அமைச்சர் வாசவன் இதை தொடங்கி வைத்தார். கனடாவில் வசிக்கும் பாலசுப்பிரமணியன் நேர்த்திக்கடனாக இந்த இயந்திரத்தை வழங்கியுள்ளார்.
தொடக்க நிகழ்ச்சியில் கோயில் தலைவர் டாக்டர் வி.கே. விஜயன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தேவஸ்தான ஊழியர்களும் பங்கேற்றனர். காலை நேரங்களில் பக்தர்களுக்கு இட்லி, உப்புமா, கிச்சடி, சாம்பார், சட்னி மற்றும் மூலிகை கலந்த வெந்நீர் வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்கள் அதிக அளவில் வருவதால் இட்லி தயாரிப்பை வேகமாக செய்ய இந்த இயந்திரம் பயன்படும். ஒரு மணிநேரத்தில் 5000 இட்லி தயாரிக்க முடியும். இதனால் பக்தர்களுக்கு உணவு விரைவாக வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!