சென்னை தீவுத் திடலில் 50 வது பொன் விழா பொருட்காட்சி… !
சென்னை தீவுத் திடலில் 50-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி நேற்று தொடங்கியது. கடந்த 49 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பொருட்காட்சி, இந்த ஆண்டு பொன் விழா ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அரசு ரூ.1.55 கோடி ஒதுக்கி அரசு துறை அரங்குகளை சிறப்பாக அமைத்துள்ளது.
பொன் விழா பொருட்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த பொருட்காட்சியில் மத்திய, மாநில அரசுத் துறைகளின் 43 அரங்குகள் மற்றும் 15 தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விளையாட்டு சாதனங்கள், பேய் வீடு, பனிக்கட்டி உலகம், 3டி ஷோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பொருட்காட்சி 70 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!