இந்தியா ஜிந்தாபாத்... ஆபரேஷன் சிந்து மூலம் 517 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!
ஈரான் – இஸ்ரேலில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி படித்து வரும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்து’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவின் ஆபரேஷன் சிந்து நடவடிக்கையில் ஈரான் தனது வான்வெளி கட்டுப்பாடுகளைத் திறந்த பிறகு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்கள் அடங்கிய மற்றொரு குழு நேற்றிரவு டெல்லியை வந்தடைந்துள்ளது. இந்தியா ஜிந்தாபாத் என அனைவரும் மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டனர்.
அதைத் தொடர்ந்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் இருந்து மற்றொரு விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு தரையிறங்கியது. ஏற்கனவே வியாழக்கிழமை, 110 மாணவர்கள் ஏற்கனவே ஆர்மீனியா மற்றும் தோஹா வழியாக இந்தியா திரும்பிவிட்டனர்.
இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்கள் தெஹ்ரானில் இருந்து மஷாத்துக்கு மாற்றப்பட்டிருந்தனர். அங்கிருந்து புறப்பட்ட விமானங்கள் புது டெல்லியால் ஏற்பாடு செய்யப்பட்டு ஈரானிய விமான நிறுவனமான மஹானால் இயக்கப்பட்டன. இந்திய அதிகாரிகள் ஈரானிய விமான நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, மாணவர்கள் புறப்படுவதற்கு முன்பு தெஹ்ரானில் இருந்து மஷாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!