சிரியா சிறைகளில் இருந்த 5,700 ஐஎஸ் கைதிகள் இராக்கிற்கு மாற்றம்... பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!
சிரியா நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த சுமார் 5,700 ஐஎஸ் பயங்கரவாதிகள் பாதுகாப்புடன் ஈராக் நோக்கி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு இராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ் அமைப்பு பின்னர் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளால் வீழ்த்தப்பட்டது. அப்போது பிடிபட்ட பலர் வடகிழக்கு சிரியாவில் குர்து ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டிலிருந்த சிறைகளில் வைக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த கைதிகளை இராக்கிற்கு மாற்றும் நடவடிக்கை வேகமடைந்துள்ளது.
சிரிய அரசு மற்றும் குர்து ஆயுதக் குழுவுக்கிடையிலான சமீபத்திய மாற்றங்களால் சிறைகளின் கட்டுப்பாடு அரசின் வசம் வந்துள்ளது. இந்த சூழலில் பாதுகாப்பு சீர்குலைந்தால் கைதிகள் தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக இராக் கருதியது. அது தனது உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறக்கூடும் என்ற கவலையும் எழுந்தது. இதனால் கைதிகளை திரும்பப் பெற இராக் அரசு கோரிக்கை விடுத்தது.
அந்த கோரிக்கையை ஏற்று கடந்த ஜனவரி 21 முதல் கட்டங்களாக இடமாற்றம் தொடங்கப்பட்டது. சுமார் மூன்று வாரங்களாக நீடிக்கும் இந்த நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையை மாற்றுமா என்ற கேள்வி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!