பகீர் காட்சிகள் .... ஈரானில் 6 விமான நிலையங்கள், 15 ராணுவ விமானங்கள் முழுமையாக அழிப்பு... !
ஈரான் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள் குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. ஜூன் 13-ம் தேதி தொடங்கிய தாக்குதல் 10வது நாளாக தாக்குதல் தொடர்ந்து வருகிறது.தற்போது, ஷாத், டெஸ்ஃபுல் மற்றும் பிற பகுதிகளில் அமைந்துள்ள 6 ஈரானிய இராணுவ விமான நிலையங்கள் மீது ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் ஈரானின் திறனைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக கருதப்படுகிறது. இலக்கு வைக்கப்பட்ட தளங்களில் பார்சின் மற்றும் தெஹ்ரான் விமானத் தளங்களும் அடங்கும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!