undefined

வகுப்பறையில் மது அருந்திய 6 மாணவிகள் சஸ்பெண்ட் - அரசு மட்டத்தில் விசாரணை தீவிரம்!

 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில், பள்ளிச் சீருடையில் வகுப்பறைக்குள் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 மாணவிகள் மீது பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

'தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு' என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டைப் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியைச் சேர்ந்த மாணவிகளே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீடியோவில் மாணவிகள் வட்டமாக அமர்ந்து, கொஞ்சமும் பயமோ கூச்சமோ இல்லாமல் 'சியர்ஸ்' எனக் கூறிச் சிரித்தபடி மது அருந்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சில மாணவிகள் 'எனக்கும் வேண்டும்' எனக் கேட்டு மதுவை வாங்கும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் 6 மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் உடனடியாகப் பள்ளியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசகர்களைக் கொண்டு கவுன்சிலிங் வழங்கவும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேபோல, இந்தச் சம்பவம் குறித்து அரசு சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, வகுப்பறையில் மது அருந்தும் அளவுக்கு மாணவிகளுக்கு எப்படித் துணிச்சல் வந்தது, ஆசிரியர்கள் கண்காணிக்கத் தவறியது ஏன், இந்தச் சம்பவம் பள்ளி நேரத்தில் நடைபெற்றதா அல்லது பள்ளி முடிந்த பிறகா என்பது உள்ளிட்டப் பல விஷயங்கள் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

பாளையங்கோட்டையில் நூற்றாண்டுப் பாரம்பரியம் மிக்க பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மாணவிகள் வகுப்பறைக்குள்ளேயே மது அருந்தும் சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!