undefined

 அரசு பள்ளி சமையலர் மீது தாக்குதல் வழக்கில்  6 பேருக்கு 2 ஆண்டு சிறை!  

 
 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமலைகவுண்டன்பாளையம் அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்தவர் பாப்பாள். அவரை பணியில் தொடர விடாமல் உள்ளூர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு செல்ல தடுக்கினர்.   சாதி வேறுபாடு காரணமாக அவர்மீது தாக்குதல் நடத்தியதாகவும் புகார் எழுந்தது. இதனால் பாப்பாளையும், பள்ளி மாணவர்களையும் வராமல் தடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 36 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் வட்டார அலுவலர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டார். வழக்கில் ஈடுபட்ட 35 பேரில், விசாரணை நடைபெறும் காலத்திலேயே 4 பேர் உயிரிழந்ததால், மீதமுள்ள 31 பேர்மீது திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து வந்தது.

இந்நிலையில், இன்று வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பழனிசாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி என மொத்தம் 6 பேரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது. இவர்கள் தலா 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

மற்ற 25 பேர் ஆதாரங்களின் பற்றாக்குறையால் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இந்த தீர்ப்பு, சாதி அடிப்படையிலான தாக்குதலுக்கு எதிரான சட்ட வலிமையையும், அரசு பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!