விடுதியில் ஏசி வெடித்து 6 மாணவிகள் மயக்கம்... பெரும் பரபரப்பு!
தெலுங்கானா மாநிலம் மேச்சல்–மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள அல்வால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கும் விடுதி ஒன்றில் இன்று காலை 6 மாணவிகள் சுயநினைவை இழந்து கிடந்தனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக உதவிக்கு ஓடி வந்தனர்.
விடுதியில் பொருத்தப்பட்டிருந்த ஏசி இயந்திரம் திடீரென வெடித்து தீ பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அறை முழுவதும் புகை சூழ்ந்து, மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மாணவிகளை மீட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தீயையும் தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏசி இயந்திரத்துக்கான மின்சார இணைப்பில் ஏற்பட்ட கசிவே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!