undefined

ரோஜ்கார் மேளாவில் 61000  பேருக்கு வேலை வாய்ப்பு… பிரதமர் மோடி   நியமன ஆணை!

 

மத்திய அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப 10 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் ‘ரோஜ்கார் மேளா’ திட்டம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அஞ்சல் துறை, வருவாய் துறை, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டெல்லியில் இன்று நடைபெற்ற ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 61 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளதாக கூறினார். இதன் மூலம் 21 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் புதிய பொருளாதாரம் உருவாகியுள்ளதாகவும், அனிமேஷன், டிஜிட்டல் மீடியா போன்ற துறைகளில் இந்தியா உலக அளவில் முக்கிய மையமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!