12வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு அங்கன்வாடி மையங்களில் 618 காலி பணியிடங்கள்!
12வது வகுப்பு தேர்ச்சியடைந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. உடனே அப்ளை பண்ணுங்க. புதுச்சேரி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், மத்திய அரசின் சாக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்தின் கீழ் மொத்தம் 618 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 344 அங்கன்வாடி பணியாளர்களும், 274 அங்கன்வாடி உதவியாளர்களும் (பெண்கள் மட்டும்) அடிப்படை கெளரவ ஊதியத்தில் நியமிக்கப்படவுள்ளனர். இப்பணிகளுக்கு புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணியிடங்களுக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்படும். பின்னர் தேர்வு குழுவின் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
ஏற்கெனவே கூகுள் படிவங்கள் மூலம் விண்ணப்பித்தவர்களும் கூட, துறை இணையதளம் வழியாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். எந்த வகை பிரிவுக்கும் வயது தளர்வு கிடையாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 22ம் தேதி மாலை 5 மணி வரை துறை இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை அறிய https://wcd.py.gov.in மற்றும் https://www.py.gov.in என்ற இணையதள முகவரிகளைப் பயன்படுத்தலாம் என மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் முத்துமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!