650 ஆண்டுகள் பழமையான கோபுரம் இடிந்து நொறுங்கியது... சீனாவில் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!

 
சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரத்தின் மேற்கூரை முழுவதும் இடிந்து தரைமட்டமானது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று பெங்யாங் கோபுரம் ஆகும். 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோபுரத்தைக் காண தினமும் நூற்றுக் கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

ஏராளமானோர் அங்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் திடீரென அதன் மேற்கூரை சரிய தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். சற்றுநேரத்தில் அந்த கோபுரத்தின் மேற்கூரை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த பெங்யாங் கோபுரம் கடந்த 1995ம் ஆண்டு புணரமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது மேற்கூரை இடிந்து விழுந்ததால் உள்ளூர் நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?