எச்சரிக்கை... இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை.... !
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்று திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தின் ஒரிரு இடங்களில் கனமழை பதிவானது. இந்த வானிலை மாற்றம் பொதுமக்களிடையே மீண்டும் மழை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், 6-ஆம் தேதி தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 முதல் 12 வரை தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரக்கூடும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!