undefined

கோயில் திருவிழாவில்  தீ மிதித்த போது 7 பக்தர்கள் காயம்!

 

தெலுங்கானாவில் 1300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பார்வதி ராமலிங்கேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் தீ மிதிக்கும் நிகழ்ச்சியின் போது விபரீதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 7 பக்தர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கோயில் திருவிழாவில் வழக்கமாக சுமார் 1,500 பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சந்திர கிரகணத்திற்குப் பிறகு விழா நடைபெற்றதால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோயில் வளாகத்தில் பெரும் திரளான மக்கள் கூடியிருந்தனர்.

திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற தீ மிதிக்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் தீ மீது நடந்தபோது எதிர்பாராத விதமாக சிலர் வழுக்கி விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கோயில் நிர்வாகமும் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!