7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல்... கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் நைசாக பேசிய அந்த நபர், ரூ10 கொடுத்து கடைக்கு சென்று தின்பண்டம் வாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். பின்னர் அவரை பின்தொடர்ந்து சென்று காவிரி ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் தாய், மகளை காணாமல் தேடியுள்ளார். இரவு 9 மணிக்கு வீடு திரும்பிய சிறுமியின் உடலில் காயங்களும் ரத்தமும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் குமாரபாளையம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கண்காணிப்பு காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் 27 வயது மணிகண்டன் என்பவரை கைது செய்தனர். பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த அந்த நபர் மீது பாலியல் துன்புறுத்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!