பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவு... ஒரு சிறுமி கவலைக்கிடம்!
பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர் . பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் சதர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். பெரும்பாலான மாணவர்கள் நலமடைந்தாலும், ஒரு சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிய உணவு சாப்பிட்ட சில நேரத்திலேயே பல மாணவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பல மாணவர்களுக்கும் இதே அறிகுறிகள் தென்பட்டதால் பள்ளி வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது. உணவில் பல்லி விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர். பள்ளிக்கு மதிய உணவு பாரஸ் அக்ரோ என்ற தன்னார்வ அமைப்பின் மூலம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் மாணவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு திரண்ட பெற்றோர்கள் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!