டிகிரி முடிச்சா மத்திய அரசில் வேலை வாய்ப்பு... 7500 காலி பணியிடங்கள்! எப்படி விண்ணப்பிப்பது? முழு விபரம்!

 

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்களில்   பி மற்றும் சி பிரிவுகள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


 இந்த பணியிடங்கள் மூலம் மத்திய அரசின் தலைமை செயலகம், மத்திய புலனாய்வுத் துறை, இரயில்வே துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை, தலைமை அலுவலகம் இவைகளில்  உதவிப் பிரிவு அலுவலர்  பணியிடங்களும், மத்திய அரசின் வருவாய் துறைகளில் உதவி அலுவலர் பணியிடங்களும் ஆய்வாளர் பணியிடங்களும் ,  மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உதவியாளர், கண்காணிப்பாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  டிஎன்பிஎஸ்சி, வங்கி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஏற்ற தேர்வு முறையாக இருப்பதால் அதற்கு தயாராகும் தேர்வர்கள் இதற்கும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி 
தேர்வு முறை: கணினி வழியில் நடைபெறும் நிலை I தேர்வு, நிலை- II தேர்வு  
தேர்வு கட்டணம் : தேர்வுக் கட்டணம் ரூ100/-  குறிப்பிட்ட பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண விலக்கு. 
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 3ம் தேதி நள்ளிரவு 11மணி வரை 
விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in  மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!