சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு, பாதுகாப்பு பணியில் 7,500 போலீசார் - மெரினா முதல் விமான நிலையம் வரை 'சிவப்பு மண்டல'க் கட்டுப்பாடுகள்!
சென்னையில் நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவை முன்னிட்டு, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு 7,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மெரினா உழைப்பாளர் சிலை மற்றும் ஆளுநர் கொடியேற்றும் பகுதிகளைச் சுற்றி ஐந்து அடுக்குகளாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில், 7,500-க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக மெரினா கடற்கரை, ராஜ்பவன் மற்றும் முதல்வர் இல்லம் உள்ளிட்ட பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்றும், நாளையும் இரண்டு தினங்களுக்குச் சென்னையில் ட்ரோன்கள் அல்லது ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு, மாதவரம் பேருந்து முனையங்களில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நகரின் நுழைவு வாயில்களான மாதவரம், மீனம்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தங்கியுள்ளனரா என்பது குறித்துப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!