undefined

கரூரில் அதிர்ச்சி: 7 வயது சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை - இளைஞருக்குத் தர்ம அடி கொடுத்துப் போலீசில் ஒப்படைப்பு!

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்குத் தின்பண்டம் வாங்கித் தருவதாகக் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரைப் பொதுமக்கள் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கரூர் மாவட்டம் கழுகூர் ஊராட்சி மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (23). இவர் கழுகூர் எஸ். வலையப்பட்டி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு, அதீத போதையில் இருந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியிடம் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனது இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார்.

காணாமல் போன சிறுமியைப் பெற்றோர்கள் கடந்த 2 மணி நேரமாகத் தேடி வந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு, சரவணன் அந்தச் சிறுமியை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கிவிட முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த பெற்றோரும் பொதுமக்களும் சரவணனைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். இது குறித்த தகவலறிந்து வந்த தோகைமலை போலீசார், சரவணனை மீட்டு விசாரணை நடத்தினர். சிறுமியிடம் நடத்திய விசாரணையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்கள் தோகைமலை - மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இப்பகுதியில் விபத்துகளுக்கும், இத்தகைய சமூகக் குற்றங்களுக்கும் காரணமாக இருக்கும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் காரணமாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட நிலையில், குளித்தலை டிஎஸ்பி சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதுக்கடை தொடர்பாகத் துறையினரிடம் ஆலோசிக்கப்படும் என்றும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!