திருமண வீட்டில் சிலிண்டர் வெடிப்பு... புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் பலி!
Jan 12, 2026, 15:35 IST
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செக்டார் ஜி-7/2 பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திருமணம் நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஆரம்ப விசாரணையில் எரிவாயு கசிவே வெடிப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் குறைந்தது 4 வீடுகள் சேதமடைந்தன. உயிரிழப்புக்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். திருமண மகிழ்ச்சி, நொடியில் சோகமாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!