9 நாள் கண்ணீர் போராட்டம்..  விளாத்திகுளம் மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த +2 மாணவி, கடந்த மார்ச் 10-ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு காட்டில் வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. "குற்றவாளியைக் கைது செய்யாமல் என் மகளின் உடலை வாங்க மாட்டோம்" எனத் தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு அந்தப் பெற்றோர் நடத்திய 9 நாள் தர்மயுத்தம் இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. அந்த ஏழைப் பெற்றோரின் கண்ணீருக்கும், கிராம மக்களின் விடாப்பிடியான போராட்டத்திற்கும் பலனாக, தர்ம முனீஸ்வரன் என்ற முக்கியக் குற்றவாளியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கைச் சவாலாக எடுத்துக்கொண்ட தூத்துக்குடி எஸ்பி மதன் தலைமையிலான தனிப்படையினர், எந்த ஒரு அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல் அறிவியல் ரீதியான விசாரணையில் இறங்கினர். வேடநத்தம் கிராமத்தில் உள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இறுதியில் சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், தர்ம முனீஸ்வரனே அந்தப் பிஞ்சுயிரைப் பறித்த கொடூரன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவன் கைது செய்யப்பட்ட தகவலைப் போலீசார் முறைப்படி அறிவித்தனர்.

குற்றவாளி கைது செய்யப்பட்டதை அடுத்து, 9 நாட்களாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலைப் பெற்றோர் இன்று கண்ணீர் மல்கப் பெற்றுக்கொண்டனர். ஊர் மக்கள் திரண்டு வந்து அந்த மாணவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். "என் மகளுக்கு நேர்ந்த கதி வேறு யாருக்கும் நேரக்கூடாது; அவனுக்கு உச்சபட்ச தண்டனை வாங்கித் தர வேண்டும்" என மாணவியின் தந்தை உருக்கமாகத் தெரிவித்தார். 9 நாட்கள் நீடித்த இந்தப் போராட்டம் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!