9 மாத குழந்தை எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து பலி!
தமிழகத்தில் சென்னை மதுரவாயிலில் வசித்து வருபவர் நடராஜன் . இவருக்கு மின்மோட்டார் பழுது பார்க்கும் இவருக்கு கௌதம் என்ற மகன் இருந்து வருகிறார். கௌதமிற்கு மஞ்சு என்ற மனைவி 9 மாத பெண் குழந்தை எழிலரசி இருந்து வருகின்றனர்.
நடராஜன் நேற்று முன்தினம் அவரது இ- பைக்கை வீட்டின் போர்டிகோவில் வைத்து சார்ஜ் போட்டுவிட்டு இரவு தூங்க சென்றனர். பின்னர் அதிகாலை இ பைக் தீ பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதில் வீட்டின் முன்பகுதி முழுவதுமாக பற்றி எரிய தொடங்கியது . இதனை கண்ட கௌதம், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மஞ்சு ஒன்பது மாத குழந்தை எழிலரசி தந்தை நட்ராஜனுடன் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார்.
இதில் கவுதம், மஞ்சு, குழந்தை எழிலரசி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மூவரும் கேஎம்.சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இதில் 9 மாத குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது. இச்சம்பவம் குறித்து மதுரவாயல் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!