இந்திய எல்லையில் 9 பாகிஸ்தான் மீனவர்கள் கைது... போர்பந்தருக்கு கொண்டு செல்லப்பட்ட படகு!
இந்தியக் கடல் எல்லைப் பகுதிகளில் அண்மைக்காலமாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச கடல்சார் எல்லைக் கோட்டைத் (IMBL) தாண்டி அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகையும், அதில் இருந்தவர்களையும் கடலோரக் காவற்படை மடக்கிப் பிடித்துள்ளது.
அரபிக்கடலில் இந்தியக் கடலோரக் காவற்படையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இந்திய எல்லைக்குள் 'அல்-மதீனா' என்ற பெயரிடப்பட்ட பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைந்ததைக் கண்டறிந்தனர்.
இந்தியக் கப்பலைக் கண்டதும் பாகிஸ்தான் மீனவர்கள் கடலில் வேகமாகப் பயணித்துத் தப்ப முயன்றனர். இருப்பினும், கடலோரக் காவற்படை வீரர்கள் மிக லாவகமாகப் பாகிஸ்தான் படகைச் சுற்றி வளைத்து இடைமறித்தனர். படகில் இருந்த 9 பாகிஸ்தான் மீனவர்களையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும், அவர்களின் படகும் மேலதிக விசாரணைக்காக குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இவர்கள் மீன்பிடிக்கத் தவறுதலாக எல்லை தாண்டினார்களா அல்லது வேறு ஏதேனும் உளவு வேலைகளில் ஈடுபட முயன்றார்களா என்பது குறித்துப் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!