undefined

 இயல்பை விட 90 % மழைப்பொழிவு!

 
 

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில்  21ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். 

இதன் காரணமாக, 22ம் தேதி அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது வடக்கு திசையில் நகரக்கூடும். தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.  தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை பெய்த மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. 

குறிப்பாக கள்ளக்குறிச்சியில் இயல்பான மழை அளவு சராசரி 6.2 மட்டுமே . தற்போது 28 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகியிரு உள்ளது. இந்த அளவானது கிட்டத்தட்ட இயல்பைவிட 83 சதவீதம் அதிகமாகும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்தாலும் ஒரு சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தில் மார்ச் 1லிருந்து  தற்போது வரை பெய்த மழையின் அளவு இயல்பை விட கிட்டத்தட்ட 90 சதவீதம் அதிகமாக பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது