9000 கோடி மோசடி!! தகவல் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம்!!

 

தமிழகத்தில்  நிதி நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தொடர் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் , டி.ஜி.பி அலுவலகம் சார்பில் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி "தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு,  கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு  மோடியில் ஈடுபடத் தொடங்குகின்றன. பொதுமக்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக முகவர்களையும், பணியாளர்களையும் நியமித்து விடுகின்றன. இதனை நம்பி பணம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அறிவித்தபடி ஒவ்வொரு மாதமும் வட்டி தொகையையோ, முதலீட்டையோ திருப்பி தருவதில்லை.  

இதன் பிறகு ஏமாந்த பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், பிரபலமான ஆருத்ரா கோல்டு நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு  வழக்கை பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, விருதுநகர், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் அரியலூர் என  37 இடங்களில் அதிரடி பொருளாதார சோதனை நடத்தப்பட்டது.  

இந்நிறுவனத்தில் சுமார் 19,255 பேர், சுமார் ரூ 2,438 கோடி முதலீடு செய்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் 8 பேர்  மீது குற்றம் சுமத்தப்பட்டு, அவர்களில் பாஸ்கர், மோகன்பாபு உட்பட 3 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  எல்.என்.எஸ் சர்வதேச நிதி சேவை என்ற நிறுவனம் சம்பந்தமாக காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை, உட்பட  21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதில் சுமார் ஒரு லட்சம் பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் ரூ. 6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 


அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில், 4,500 பொதுமக்களிடம் முதலீட்டு தொகையாக சுமார் ரூ. 600 கோடி முதலீடு செய்துள்ளனர்.  இந்த வழக்கில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கண்ட 3 நிறுவனங்களில் முதலீட்டு தொகை செலுத்தி ஏமாந்தவர்கள்  தலைமறைவு குற்றவாளிகளாக இருப்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கலாம். இவர்கள்  தெரிவிக்கும் தகவல் உறுதியாக இருப்பின் அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் . அத்துடன்  தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டி.ஜி.பி சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் , "இது போன்ற மோசடி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்.  3  மோசடி நிறுவனங்களில் சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சுமார் ரூ 9,000 கோடி முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.  பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணத்தை இழந்த பொதுமக்களுக்கு திருப்பித் தர உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் பொதுமக்களும் தங்களுக்கு தெரிந்த தகவலை அளித்து காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!