எலெக்‌ஷன் ஸ்பெஷல்... 40 லட்சம் பெண்களுக்கு வங்கிக்கணக்கில்  ரூ.9,000/- வரவு!  

 

அஸ்ஸாம் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில அரசு 40 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் தலா ரூ.9,000 வரவு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருனோடோய் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகையாக இந்த தொகை செலுத்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்த தொகையில் மாதாந்திர உதவித்தொகையுடன் ஜனவரி முதல் நான்கு மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அஸ்ஸாம் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு தொகையும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக மொத்தமாக ரூ.3,600 கோடி ஒரே நாளில் பெண்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!