தமிழகத்தில் 99.20% வாக்காளர்களுக்குக் கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டன - தேர்தல் கமிஷன் தகவல்!
தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (Special Intensive Revision - SIR) பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்காளர்களுக்குக் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை: கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். இந்தப் பணிகளுக்காகத் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 6 கோடியே 35 லட்சத்து 99 ஆயிரத்து 698 படிவங்கள், அதாவது, 99.20 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
விநியோகிக்கப்பட்ட படிவங்களில், 5 கோடியே 86 லட்சத்து 57 ஆயிரத்து 184 படிவங்கள் (91.49 சதவீதம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 962 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எஸ்.ஐ.ஆர். (SIR) பணியில் ஈடுபட்டுள்ளனர்.
10 லட்சத்து 16 ஆயிரத்து 423 கணக்கீட்டுப் படிவங்கள், அதாவது, 99.50 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அவற்றில் 9 லட்சத்து 61 ஆயிரத்து 500 படிவங்கள் (94.12 சதவீதம்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளன என்பது இந்தத் தகவல்கள் மூலம் தெளிவாகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!