undefined

பள்ளி முதல்வர் பாலியல் அத்துமீறல்.. விடுதி அறையில் மாணவி தற்கொலை!

 
சட்டீஸ்கர் ஜஷ்பூர் மாவட்டத்தில் பாகிச்சா காவல் நிலைய எல்லைக்குள் இயங்கி வந்த தனியார் பள்ளியில், அனுமதி இன்றி விடுதி ஒன்று செயல்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 124 மாணவர்கள் படிக்கும் நிலையில், விடுதியில் 22 மாணவர்களும் 11 மாணவிகளும் மட்டும் தங்கி இருந்ததாக தெரிகிறது 

இந்நிலையில், கடந்த ஞாயிறு படிப்பு அறைக்குள் சென்ற 9ம் வகுப்பு மாணவி சேலையில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விபரீத சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அறையிலிருந்த தற்கொலைக் கடிதம் கைப்பற்றப்பட்டது.

அதில் பள்ளி முதல்வர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த மாணவி குற்றம் சாட்டியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து முதல்வர் கைது செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்கொலைக்குப் பின்னணி குறித்து மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!