பள்ளிக்கு கிளம்பிய 9ம் வகுப்பு மாணவி வீட்டு வாசலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
Dec 8, 2025, 14:00 IST
தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தை சேர்ந்த முருகன், அவரது மனைவி சங்கரம்மாளின் மகள் கிருஷ்ணவேணி இன்று காலை வீட்டின் வாசலிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாணவி ஆலங்குளம் அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பில் படித்து வந்தார் மற்றும் ஏற்கனவே இதய பிரச்சினைக்காக மருந்து எடுத்துக்கொண்டிருந்தார்.
பள்ளிக்குச் செல்லும் போது சீருடை அணிந்து, பாடப்புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்ற கிருஷ்ணவேணி வாசலிலேயே மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் கிருஷ்ணவேணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!