undefined

வீடியோ!! பள்ளி மாணவிகள் முன்னால் தண்டால் , உடற்பயிற்சி, மாஸ் காட்டிய இளைஞர்!!

நடுரோட்டில் குசும்பு !!
 

பள்ளி மாணவிகளை ஈர்க்க நடுரோட்டில் உடற்பயிற்சி செய்த இளைஞர். கூட்டமாக நின்ற மாணவிகளின் மத்தியில்  நடுரோட்டில் வித்தை காட்டிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ!

புதுச்சேரியில் ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர், பள்ளி மாணவிகளை ஈர்க்க நடுரோட்டில் குசும்புத் தனத்தை  காட்டியது இணையத்தில் பரவி வருகிறது. தற்போதைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் உள்ள மோகம் காரணமாக ஆங்காங்கே சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றவர்களை கவருவதற்காக ஏராளமானோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடனமாடி வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

சமீபத்தில் தூத்துக்குடியில் ஏராளமான மாணவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடனமாடிய வீடியோவை நீக்கி போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

<a href=https://youtube.com/embed/xsO-eb-enKc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/xsO-eb-enKc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="#Pushup | பள்ளி மாணவிகள் முன்பு தண்டால் எடுத்த இளைஞர் | #Thandal | #Puducherry" width="1499">

அந்த வகையில், புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு பகுதியில் பள்ளி முடிந்து மாணவிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது, ஹெல்மெட் அணிந்துவாறு நடந்து சென்ற இளைஞர் ஒருவர் திடீரென சேட்டையில் ஈடுபட்டார். மாணவிகளை ஈர்ப்பதாக நினைத்து சாலையிலேயே குசும்புத் தனமாக  தண்டால் அடித்தார். 

நடுரோட்டில் இவர் செய்த செயலால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில் போலீசார் அந்த இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!