அசத்தல்.. மருமகனுக்கு 379 வகையான உணவுகளை சமைத்து, பரிமாறி திக்குமுக்காட செய்த மாமியார்!

 

தனது செல்ல மகளை வாழ்நாள் முழுவதும் அன்பாகவும், அக்கறையாகவும் பார்த்துக் கொள்ளப் போகும் மருமகனுக்கு 379 வகையான உணவுகளை தானே சமைத்து பரிமாறி இருக்கிறார் மாமியார். இந்த வருஷம் தான் மகளுக்கு தலைப்பொங்கல். முதல் சங்கராந்திக்கு வீட்டுக்கு விருந்துக்கு வந்த  மருமகனை இப்படி விதவிதமாக சமைத்து அசத்தியிருக்கிறார் மாமியார். மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தொழில் அதிபர் பீமாராவ். இவருடைய மகள் குஷ்மாவை விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்நிலையில், திருமணமாகி வரும் முதல் சங்கராந்திக்கு மகளையும், மருமகனையும் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்திருந்தார்.

மாமியாருக்கும், மருமகளுக்கும் தான் பெரும்பாலான இடங்களில் கெமிஸ்ட்ரி வொர்க் - அவுட் ஆவதில்லை. இப்போதெல்லாம் காலம் மாறி போச்சு. நிறைய இடங்களில், மாமியார்கள் தங்களது மருமகன்களைக் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். ‘என் பொண்ணையே வெச்சு சமாளிக்கிறீயே? என்கிற பரிதாபமாகவோ.. என் பொண்ணை நல்லா பார்த்துக்கப்பா? என்கிற எதிர்பார்ப்பா? என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். ஆனால், தங்களது மகளின் கண்களில் ஆனந்தத்தைப் பார்க்க விரும்பும் அம்மாக்கள், தங்களது மருமகனுக்கு விதவிதமாக சமைத்து, அதிக எண்ணிக்கையில் வெரைட்டியான உணவுகளைச் செய்து சாப்பிட சொல்லி மகிழ்ச்சியடைகிறார்கள்.

இந்த எண்ணிக்கை, 30, 40 என்று துவங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் 60,80 என அதிகரித்து 150 வரை சென்றது. தற்போது, ஆந்திர  மாநிலத்தில், சங்கராந்தி விழாவை முன்னிட்டு, புது மாப்பிள்ளையை வீட்டுக்கு அழைத்து, பஜ்ஜியில் துவங்கி சுட சுட பிரியாணி வரையில் 379 வகையான உணவுகளைத் தானே சமைத்து தயார் செய்து சாப்பிடச் சொல்லி பரிமாறி அழகு பார்த்திருக்கிறார் மாமியார் சந்தியா. 

பொதுவாகவே தமிழர்களைப் போலவே விருந்தோம்பலுக்கு ஆந்திராவின் கோதாவரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பெயர் போனவர்கள். விருந்தினர்களை அவர்கள் உபசரிக்கிற பாங்கே அலாதியானது. மனதில் வஞ்சம் இல்லாமல் நெஞ்சமெல்லாம் ஆரத்தழுவி முழு அன்போடு உபசரிப்பார்கள். இதெல்லாம் இந்த தலைமுறையினர் மறந்து போன விஷயங்களில் ஒன்றான இந்த காலத்தில், இந்த உபசரிப்பை  மொத்த ஆந்திர மக்களும் கொண்டாடுகிறார்கள்.

சாதம், பிரியாணி, புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், அவியல், கூட்டு, பொரியல், அப்பளம், வடகம் வடை, பாயாசம், ஜிலேபி, மைசூர் பாக்கு, லட்டு, பூந்தி, வெற்றிலை பஜ்ஜி, கீரை வடை, வெங்காய வடை, வெங்காய பஜ்ஜி, தயிர் மோர் என்று அந்த பட்டியல் நீண்டது. உணவுகளை தயார் செய்த மாமியார் சந்தியா அவற்றை மருமகனுக்கு மகளுக்கும் பரிமாறினார். இத்தனை உணவுகளையும் சாப்பிட வேண்டுமா என்று  திக்குமுக்காடி போன மருமகன், சமைத்து வைத்திருந்ததில் 10 சதவீத உணவைக் கூட சாப்பிடமுடியாமல் திண்டாடினார். 

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? எந்த வியாபாரம் உங்களுக்கு லாபம் தரும்!?

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்