அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கள் தொடக்க தேதி அறிவிப்பு!!

 

அரசு பள்ளி மாணவர்களுக்கு 26ம் தேதி முதல் நீட் பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு அதிரடி முயற்சிகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசுப்பள்ளியில் பயிலும்  மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான  நீட் பயிற்சி வகுப்புகள் நவம்பர் 26ம் தேதி தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க நீட் தேர்வை  எழுத வேண்டியது அவசியம். இதன் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 வருடமாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் நேரடி வகுப்புக்கள் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக செய்யப்பட்டு வருகின்றன. 


தமிழகம் முழுவதும்  ஒரு பிளாக்கிற்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இதில் ஒரு மையத்தில்  70 மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். அதன்படி தமிழகம் முழுவதும் 29000 மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிற்சி  வகுப்பிலும் மொத்தம் உள்ள 70 பேரில்  தற்போது 11ம் வகுப்பில் படித்து வருபவர்களில் 20 பேரும், 12ம் வகுப்பில் 50 பேரும்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை 10 மையங்களில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. அந்த வகையில் நடப்பாண்டிற்கான  பயிற்சி வகுப்புக்கள் வரும் சனிக்கிழமை நவம்பர் 26ம் தேதி தொடங்கப்பட உள்ளது.  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பயிற்சி மையங்களில் சேர்ந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!