பகீர்!! 1800 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு!! மீண்டும் தீயாய் பரவும் பறவைக்காய்ச்சல்!!

 

கேரளாவில் மீண்டும்  பறவை காய்ச்சல் பரவல் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. கேரளாவில் அடிக்கடி பறவைக்காய்ச்சல்  பரவலால்  கோழி, வாத்து போன்ற வளர்ப்பு பறவையினங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது  கோழிக்கோட்டில் அமைந்துள்ள அரசு  கோழி பண்ணையில் உள்ள 1,800 கோழி குஞ்சுகள் திடீரென உயிரிழந்து உள்ளன. உடனடியாக இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கேரள விலங்குகள் நல துறை அமைச்சர் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.  போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு நோய் பரிசோதனை மையத்தின் ஆய்வு முடிவுகளின் படி  பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.அரசு கோழிப்பண்ணையில் உள்ள 5000 கோழி குஞ்சுகளில்  1,800 கோழி குஞ்சுகள் உயிரிழந்துள்ளன.

இதனால்  தமிழகத்தில் கோழிப்பண்ணை தொழிலில் பாதிப்பு ஏற்படக்கூடும் என  கோழி பண்ணையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இப்போது முதலே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். கேரள அரசு பறவைக்காய்ச்சல் குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பறவைகளை கொல்வதற்கான நடைமுறைகள், பல்வேறு அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!