உஷார்!! உருவாகப் போகும் புதிய ஆபத்து!! வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! 

 

தமிழகத்தில் அதிகாலையில் பனிமூட்டமும் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்து வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக  ஜனவரி 27ம் தேதி  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும்.

இது அதற்கடுத்த 3 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரலாம். இதனால் இன்று  மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி 26, 27ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் ஜனவரி 28, 29ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக  30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியசாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க