படுத்த படுக்கையான நடிகை சமந்தா?! ரசிகர்கள் பிரார்த்தனை!!

 


 தமிழ் திரையுலகில் மட்டுமல்ல தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகிலும் முண்ணனி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த சில நாட்களாக தசை அழற்சி நோய்க்கு சிகிச்சை எடுத்து வருவதாக அவரே சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் தாம் அதிக சிரமப்படுவதாகவும் விரைவில் மீண்டு வருவேன் எனவும் தெரிவித்திருந்தார்.

ரசிகர்கள், நண்பர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.  சமீபத்தில் சமந்தாவின் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படமும்  வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் சமந்தாவின் உடல்நிலையில் திடீரென தொய்வு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.  

ஆனால் அவர் வீட்டில் நலமுடன் ஓய்வெடுத்து வருவதாக சமந்தாவின் உதவியாளர் தெரிவித்துள்ளார். தற்போது சமந்தா கட்டிலை விட்டு இறங்கி சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலையில் இருந்து வருவதாக  தெலுங்கு சமூக வலைதளங்கள்  தகவல் வெளியிட்டுள்ளன. சமந்தா விரைவில் குணம் அடைய திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!