ரயில்வே அசத்தல் முடிவு!! இனி சாதாரண டிக்கெட்டில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்கலாம்!!.

 

நெடுந்தூரப் பயணங்களுக்கு மக்கள் பெரும்பாலும் ரயில்களையே தேர்வு செய்கின்றனர்.  ரயில் பயணங்களில் ஏசி படுக்கை வசதி , இரண்டாம் வகுப்பு, முன்பதிவில்லா பயணம் என பல வகையான பயண முறைகள் உள்ளன. அதில் குளிர்காலங்களை பொறுத்தவரை பெரும்பாலும் ஏசி படுக்கை வசதி கொண்ட பயணங்களையே தேர்வு செய்வர். குளிரின் அளவு ஒரே மாதிரியாக இருப்பதும் வெளியில் நிலவும் குளிரின் வேகம் ரயிலின் உள்ளே தெரியாது என்பதாலும் இந்த தேர்வு முறை அமைந்திருக்கலாம். 


இதனால் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பல காலியாகவே இருப்பதால் ரயில் நிர்வாகம் புதியமுடிவு ஒன்றை செய்துள்ளது. அதன்படி முன்பதிவில்  நிரம்பாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை பொதுப்பெட்டிகளாக மாற்றுவது குறித்து ரயில்வே அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.  பொதுவாக முன்பதிவில்லா டிக்கெட்டை வைத்து கொண்டு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் ஏறினாலே நமக்கு அபராதம் விதிக்கப்படும். டிக்கெட் பரிசோதகர் வந்து நம்மை பாதியில் இறக்கி விடுவார். ஆனால் அதனை மாற்றியமைக்கும் வகையில்  இனி வரும் காலங்களில் சாதாரண  பயணக் கட்டணத்திலேயே படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணிகளை பயணிக்க அனுமதிக்கும் திட்டத்தை இந்திய ரயில்வே துறை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் அடிப்படையில்  படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் மொத்தமுள்ள இடங்களில் 80 சதவீதத்திற்கு குறைவாக நிரம்பும் ரயில்களின் விவரங்களை திரட்டவும் று அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.  தொலைதூர ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை பொதுப்பெட்டிகளாக ரயில்வே துறை மாற்றுவது இது முதல்முறை அல்ல. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் உள்ள படுக்கை வசதியுள்ள பெட்டிகளை சாதாரண பெட்டிகளாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக இத்திட்டத்தை மத்திய கிழக்கு மண்டல ரயில்வே செயல்படுத்தியது. இத்திட்டத்தால்  எண்ணற்ற பயணிகள் பலன் அடைந்தனர்.  அதே பாணியில் விரைவில் அமலுக்கு வர உள்ள திட்டத்தில் சாதாரண டிக்கெட்டில் படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் பயணிக்கலாம். இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!