ஒரே பெண்ணைக் காதலித்ததில் தகராறு.. பாலிடெக்னிக் மாணவர் கொன்று புதைத்த சிறுவர்கள்!

 

திருநெல்வேலியில், ஒரே பெண்ணை இரண்டு பேர் காதலித்து வந்துள்ளனர். இத்தனைக்கும் அந்த பெண், இவர்கள் இருவரையுமே திரும்பி பார்க்கவில்லை. இந்த காதல் தகராறில் பாலிடெக்னிக்  படித்து வந்த மாணவனை 3 சிறுவர்கள் ஒன்று சேர்ந்து அரிவாளால் கொன்று குழி தோண்டி புதைத்துள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த தங்கத்துரையின் மகன் ராஜேந்திரன் (20). பாலிடெக்னிக் கல்லூரியில்ல் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்த ராஜேந்திரன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சென்ற பின்னர், வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து திசையன்விளை காவல் நிலையித்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விடுவித்து விட்டனர்.

அதன்பிறகு அவர் வேறொருவரிடம், ராஜேந்திரன் கொலை தொடர்பாக விசாரிக்கத் தான் என்னை போலீசார் அழைத்து இருப்பார்கள் என நினைத்தேன். ஆனால் அதற்கு இல்லை என்று கூறி இருக்கிறார். இந்த தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை மீண்டும் அழைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. விசாரணையில், கொலை செய்யப்பட்ட ராஜேந்திரனும், 16 வயது சிறுவனும் ஒரே பெண்ணை காதலித்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனை கொலை செய்ய சிறுவன் திட்டமிட்டார்.

அதன்படி அவர் 16 மற்றும் 14 வயதுடைய நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ராஜேந்திரனிடம் நுங்கு வெட்டி சாப்பிடலாம் என்று கூறி தூத்துக்குடி மாவட்டம் அரசூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேரி பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ராஜேந்திரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளனர். பின்னர் அங்கு பனை மரம் அருகில் கிடந்த குழியில் அவரது உடலை போட்டு புதைத்து விட்டு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து 16 வயது சிறுவன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ராஜேந்திரனை கொன்று புதைத்த இடத்துக்கு அழைத்து சென்றனர். அவர்கள் அந்த இடத்தை அடையாளம் காண்பித்தனர். அங்கு சாத்தான்குளம் தாசில்தார் முன்னிலையில் ராஜேந்திரன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க