என்ன செய்யறதுன்னே தெரியல!! இன்று 10000 ஊழியர்கள் பணிநீக்கம்!!  கலக்கத்தில் ஊழியர்கள்!!

 

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் சிறு நிறுவனங்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள் வரை பெரும் பொருளாதாரச் சரிவை சந்தித்துள்ளன. இதனை ஈடுகட்டும்  வகையில் சமீப காலமாக பெருநிறுவனங்களான பேஸ்புக், அமேசான், ட்விட்டர் தொடங்கி மைக்ரோசாப்ட் வரை ஆட்குறைப்பு செய்து வருகின்றனர். அதன்படி இன்றைய தினம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இருந்து  10000 பேர் வரை பணிநீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டு தொடங்கியது முதல் தற்போதுவரை  உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் சுமார் 30,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பொறுத்த அளவில் ஜூலை 2022லேயே  ஆட்குறைப்பை அறிவித்தது.  மீண்டும் ஆட்குறைப்பை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் 2 லட்சத்திற்கு அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  மைக்ரோசாப்ட் ஊழியர் ஒருவர் பணிநீக்கம் குறித்து ஞ்சம் கொஞ்சமாக அதிக அளவில் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த முறை பொறியியல் பிரிவுகளிலிருந்து ஆட்குறைப்பு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.  

இனி வரும் காலங்களில் வேலைக்கு எடுக்கப்படும் ஆட்களின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்கு குறையலாம். எங்கள் பணி நிச்சயமற்றதாக, சமூக பாதுகாப்பற்றதாக இருக்கிறது" என வருத்தம் தெரிவித்துள்ளார்.  2017 வரை கடுமையான நஷ்டத்தில் இயங்கி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் 2017க்கு பிறகு லாபத்தை எட்டிப்பிடித்தது. லாபகரமான நிறுவனங்களில் ஒன்றாக திகழும் மைக்ரோசாப்ட் 'கிளவுட்-கம்ப்யூட்டிங்' மூலம் கணிசமான அளவு லாபத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. இதில் தான்  தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டுமல்லாது சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ஏற்கனவே  ஆன்லைன் வர்த்தக நிறுவனமான 'அமேசான்' 18000 ஊழியர்களை வெளியேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.  பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் 'ஷேர் சேட்' நிறுவனமும் சமீபத்தில்தான் தனது ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி மொத்த ஊழியர்களில் 20 சதவிகித ஊழியர்களை நிறுவனம் வேலையை விட்டு அனுப்பியுள்ளது. இதில் சுமார் 2,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இதிலிருந்து சுமார் 500 பேர் வரை வெளியேற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம், நிலுவைத்தொகை படிப்படியாக கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இதே நிலை தொடர்வதால்  ஊழியர்கள் கடும் நெருக்கடியான நிலையில் சிக்கியுள்ளனர்.  புத்தாண்டு பலருக்கு புதிய வாய்ப்புகளை கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 1ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை உலகம் முழுவதும் சுமார் 30,000 பேர்  பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!