அதிகாலையில் அதிர்ச்சி! இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்!

 

இன்று அதிகாலை இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் திடீரென ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேற்கு இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கைகள் ஏதும் விடுக்கப்படவில்லை என்றாலும் 6.0 ரிக்டர் அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான ‘ரிங் ஆப் பயர்’ மீது இருப்பது காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், கடுமையான பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 48 கிலோமீட்டர் (30 மைல்) ஆழத்தில் ஆச்சே மாகாணத்தின் கடலோர மாவட்டமான சிங்கில் இருந்து தென்கிழக்கே 48 கிலோமீட்டர் (30 மைல்) மையமாக இருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

2004ம் ஆண்டில், மிகவும் சக்திவாய்ந்த இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம், ஒரு டஜன் நாடுகளில் 2,30,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்ற சுனாமியை ஏற்படுத்தியது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் இருந்தவர்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!