அடி தூள்!! குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி!!

 

ஜனவரி 26ம் தேதி இந்தியா முழுவதும் குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் பாரம்பரிய, கலை, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஊர்திகளை வரலாற்றை பிண்ணணியாக கொண்ட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட மாதிரிகள் மாநில வாரியாக தேர்வு செய்யப்படும்.  

கடந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தமிழக ஊர்திக்கு இடம் அளிக்கப்படவில்லை. நடப்பாண்டில் குடியரசு தின அணி வகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சாதனையாளர்கள் உட்பட  3 மாதிரிகள் தேர்வுக்காக தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.  தமிழகம், ஆந்திரா, அஸ்ஸாம், குஜராத், அரியானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம்  மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு,  வேலு நாச்சியார், பெரியார், பாரதியார் ஆகியோர் உருவங்கள் அடங்கிய தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இந்த  ஊர்தியை  தமிழக செய்தி துறை மற்றும் விளம்பரத்துறை சார்பில் தயார் செய்யப்படும். இதில் தமிழ் பாரம்பரிய அடையாளங்கள், தலைவர்களது உருவங்கள் என தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் ஆகியவை இதில் இடம்பெறக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!