இன்று தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளில்  கிராம சபை கூட்டம்!!

 

இன்று ஜனவரி 26ம் தேதி வியாழக்கிழமை இந்தியா முழுவதும் குடியரசு தினவிழா  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளிலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய தகவல்கள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி இன்றைய தினம் காலை தமிழகம் முழுவதும்ம் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்  குறித்து விவாதிக்கப்படும். 


 அத்துடன் தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம்  குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.  கிராம நிர்வாக அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில்   பொதுமக்கள் அறிந்து கொள்ளும் விதமாக பிளக்ஸ் பேனரில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க