இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. மாணவியைக் கடத்தி பாலியல் தொல்லை! சென்னையில் பரபரப்பு!

 

விஞ்ஞானத்தின் வளர்ச்சி இருபுறமும் பிடியற்ற கத்தியாக உள்ளது. கடவுள் பாதி, மிருகம் பாதி என்பதைப் போல. கடவுளைக் கண்டால் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிற விஞ்ஞானம், சாத்தானைக் கண்டால் வாழ்க்கையை நாசம் செய்து விடுகிறது. செல்போன்களில் இணைய பயன்பாடு எளிதில் எல்லோருக்கும் சாத்தியம் என நிலைமை உருவான பின்பு பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ், கேமிரா, ஆபாச வீடியோக்கள் என பெண்களைக் குறி வைத்து குற்றங்களும் அதிகரித்துள்ளது. நான் பயன்படுத்துகிற விதத்தில் தான் நமது பாதுகாப்பும் ஒளிந்திருக்கிறது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான வாலிபர் ஒருவரை நம்பி சென்று வாழ்க்கையை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சாந்தி (35). இவர் கடந்த 22ம் தேதி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் 13 வயதுடைய தனது மகள் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில்,  திடீரென காணவில்லை. எனவே, அவளை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியிருந்தார்.

சாந்தியின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சிறுமியின் செல்போன் டவர் மூலமாக கண்காணித்த போலீசார் அந்த செல்போன் சிக்னல் மகாபலிபுரம் பகுதியைக் காட்டியதைத் தொடர்ந்து போலீசார் மகாபலிபுரம் விரைந்து சென்றனர். தொடர்ச்சியாக செல்போன் டவரை வைத்து பார்க்கும் போது மகாபலிபுரம் விடுதியில் சிறுமியும், சிறுமியுடன் மற்றொரு இளைஞரும் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த துளசிதரன் (24) என்பதும், கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராம் மூலமாக பள்ளி  மாணவியும், துளசிதரனும் பழகி வந்ததும் தெரிய வந்தது. மேலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக சூளைமேடு போலீசார் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசாரிடம் துளசிதரனை ஒப்படைத்தனர்.

இதனை அடுத்து மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. உடனடியாக துளசிதரன் மீது சிறுமியை கடத்திய வழக்கு மற்றும் போக்சோ வழக்கு ஆகிய இருபிரிவுகளில் வழக்கு பதிவு செய்யத போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!