இந்தோனேஷியா நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை 200ஆக அதிகரிப்பு!! 700க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

 


இந்தோனேசியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பெருமளவு சேதம் அடைந்துள்ளது.  மேற்கு ஜாவா தீவில்  சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் ரிக்டர் அளவில் 5.6 ஆக இந்த நிலநடுக்கம்  பதிவானது.  மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளில் இருந்து வெளியே ஓடி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.இதில் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த நிலநடுக்கத்தில் 252 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.  மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதில்  700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து  தேசிய தேடுதல் மற்றும் மீட்பு கழகத்தின் தலைவர்  ஹென்றி அல்பியாந்தி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  பாதிக்கப்பட்ட பகுதியில்  கிராமங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து உள்ளன. இதனால் மீட்பு பணி  பெரும் சவாலாக அமைந்துள்ளது. 13000க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதில், பெருமளவில் குழந்தைகளே பலியாகியுள்ளனர்.  

அவர்களில் பலர் பள்ளி செல்லும்  குழந்தைகள் . பிற்பகல்  1 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் அவர்கள் பள்ளி கூடங்களில் தான் இருந்தனர். நகர் முழுவதும் மின்கம்பங்கள் சாய்ந்ததில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டு உள்ளது.  2,200 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை 5,300க்கும் கூடுதலான மக்கள் அரசின் முகாம்களில் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!