undefined

காதல் கல்யாணம்.. மூன்றே நாட்களில் புதுமணப்பெண் தற்கொலை!

 

மனசுக்குப் பிடிச்சவனையே காதலித்து, கல்யாணமும் செய்து கொண்ட பின்பும், பானுபிரியாவின் வாழ்க்கையில் சந்தோஷம் திரும்பவில்லை. திருமணமான மூன்றே நாட்களில் வாழ்க்கையை வெறுத்து, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர், காக்கணபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மகேந்திரன். இவரது மகன் துருவன்(27). திருப்பத்தூரில் கட்டிட மேஸ்திரியாக வேலைப் பார்த்து வரும் துருவனுக்கும், திருவண்ணாமலை செங்கம் பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியாவுக்கும் (25) பழக்கம் ஏற்பட்டது. பானுப்ரியா, கட்டிடப் பணியில் கூலி வேலை செய்து வந்தார். இவர்கருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் காக்கணபாளையத்தில் கணவன் துருவனுடன் அவரது வீட்டில் பானுப்பிரியா மணவாழ்க்கையை தொடங்கினார். இவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினையில் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பானுப்பிரியா அருகில் இருந்த காளி என்பவருடைய விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பானுப்பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு துருவன் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கினர். அவர்கள் 25 அடி ஆழ கிணற்றில் கிடந்த பானுப்பிரியாவின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து குரிசிலாப்பட்டு போலீசார், பானுப்பிரியா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி 3 நாட்ககளே ஆகி உள்ளதால் பானுப்பிரியாவின் தற்கொலை குறித்து சப்- கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க