அட!! ஆச்சர்யமூட்டும் அதிசயம்!! ஆரஞ்சு வௌவால் , ஓநாய் கண்டுபிடிப்பு!!

 

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள கங்கேர்காட்டி தேசிய பூங்காவில் விலங்குகள், பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பில் பல ஆச்சர்யமூட்டும் அதிசய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அதன்படி  அரியவகை ஆரஞ்சு நிற வௌவால் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன்  வனவிலங்கு பாதுகாப்பு பட்டியலில் அழிந்து வரும் நிலையில் உள்ள ஓநாயும் இருப்பதாக  வனத்துறை அதிகாரி ஆச்சர்யமூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார். 


இதுகுறித்து கங்கேர்காட்டி தேசிய பூங்காவின் இயக்குநர் கன்வீர் தரம்ஷீல்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  ஓநாய்களை பாதுகாக்கவும், வனவிலங்குகளை காப்பாற்றவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த அரிய வகை விலங்குகளை பார்வையிடவும் பரிசீலணைகள் நடைபெற்று வருகின்றன. 

null



வனத்துறை சார்பில்  தனித்தன்மை வாய்ந்த மற்றும் அரியவகை வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க காட்டின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அதில் விலங்குகளின் வீடியோ பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் பதிவாகி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.  இந்த அரிய வகை விலங்குகள் பறவைகள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!